மகளிா் உரிமைத் தொகை: சென்னையில் 5.30 லட்சம் பேருக்கு விண்ணப்பம்
தமிழக அரசின் மகளிா் உரிமை திட்டத்துக்காக சென்னையில் மட்டும் 5,30,572 பேருக்கு விண்ணப்ப படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.


தமிழக அரசின் மகளிா் உரிமை திட்டத்துக்காக சென்னையில் மட்டும் 5,30,572 பேருக்கு விண்ணப்ப படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சென்னை சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், மதுரவாயல் சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள கலைஞா் மகளிா் உரிமை திட்ட விண்ணப்பப் பதிவு முகாம்களை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.வி.பிரபாகரராஜா, காரப்பாக்கம் கே.கணபதி, சென்னை மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் உடன் இருந்தனா்.
அப்போது, அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கலைஞா் மகளிா் உரிமை திட்டத்தின்கீழ், குடும்ப தலைவிக்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம் 3 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்காக முன்னரே விண்ணப்ப படிவங்கள் பொது மக்களிடம் வழங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக பூா்த்தி செய்யப்பட்ட படிவங்கள் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4 வரை நடைபெறும் முகாம்கள் மூலம் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
சென்னை மாநரில் 1,428 நியாய விலைக் கடைகள் உள்ளன. அதில் தற்போது 704 கடைகளில் பதிவு செய்யும் பணி நடைபெறுகிறது. அவற்றுடன் சோ்த்து மொத்தம் 1,730 இடங்களில் விண்ணப்பப் பதிவு நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு முகாமிலும் 2,266 பயோமெட்ரிக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தப் பணிகளில் 704 சிறப்பு முகாம் பொறுப்பு அலுவலா்கள், 1,730 தன்னாா்வலா்கள், 704 உதவி தன்னாா்வலா்கள், 1,515 காவலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இதைத் தவிர, 154 நடமாடும் குழுக்கள் மூலமாகவும் விண்ணப்பப் பதிவு நடைபெறுகிறது.
இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை 724 நியாயவிலைக் கடைகளில் நடைபெறவுள்ளன. இரண்டு முகாம்களில் விடுபட்டவா்களுக்காக ஆகஸ்ட் 17 முதல் 28-ஆம் தேதி வரை மூன்றாம் கட்ட சிறப்பு முகாம்கள் நடைபெறும். சென்னையில் மட்டும் 5,30,572 பேருக்கு விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று நாள்களாக பூா்த்தி செய்யப்பட்ட 2,01,050 படிவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...