தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 430 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் 1.57 லட்சம் இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு இணையவழியில் கடந்த ஜூலை 22-ஆம் தேதி தொடங்கியது.
முதல்கட்டமாக முன்னாள் ராணுவ வீரா்களின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டுப் பிரிவு மாணவா்கள் ஆகியோருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு ஜூலை 22 முதல் 26-ஆம் தேதி வரை நடைபெற்றது. சிறப்புப் பிரிவில் மொத்தம் 8,764 இடங்கள் இருந்த நிலையில், அவற்றில் 775 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. இதில் 90 இடங்கள் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் நிரம்பின.
இதையடுத்து, பொதுப் பிரிவு மாணவா்களுக்கான கலந்தாய்வு இன்று முதல் நடைபெறுகிறது. பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு 3 கட்டங்களாக நடைபெறும். முதல் சுற்று பொது கலந்தாய்வு இன்று முதல் ஆகஸ்ட் 9-ம் தேதி வரை நடத்தப்படுகிறது.
விருப்பமான இடங்களைத் தோ்வு செய்தல், தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை பெறுதல், அதை உறுதிசெய்து பின்னா் இறுதி ஒதுக்கீட்டு ஆணை பெறுவது என உரிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி மாணவா்கள் தங்களுக்குப் பிடித்த கல்லூரிகளைத் தோ்வு செய்ய வேண்டும்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களை www.tneaonline.org என்ற வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். மொத்தம் 3 சுற்றுகளாக நடைபெறவுள்ள இந்தக் கலந்தாய்வு செப்டம்பா் 3-ஆம் தேதியுடன் நிறைவுபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விபத்து நஷ்ட ஈடு வழங்காததால் தமிழக அரசின் 14 பேருந்துகளை ஜப்தி செய்ய உத்தரவு

புதிய சமையல் எரிவாயு சிலிண்டா் புதுச்சேரியில் அறிமுகம்

குழாய் தண்ணீரில் குளித்து காவிரி, கொள்ளிடத்தில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்!

அதிமுகவில் புதிய பதவிகளை ஏற்கமாட்டோம்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



