புதுக்கோட்டை புத்தகத் திருவிழா தொடங்கியது!

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் 6ஆவது புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை (ஜூலை 28) காலை 10.30 மணிக்கு தொடங்கியது. 
புதுக்கோட்டை புத்தகத் திருவிழா தொடங்கியது!

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் 6ஆவது புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை (ஜூலை 28) காலை 10.30 மணிக்கு தொடங்கியது.

மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி புத்தகத் திருவிழாவைத் தொடங்கி வைத்து அரங்குகளைச் சுற்றிப் பார்த்தார். தொடக்க நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் வை.முத்துராஜா, எம். சின்னதுரை, நகர்மன்றத் தலைவர் செ.திலகவதி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். 120 அரங்குகளில் மாநிலம் முழுவதும் இருந்தும் பிரபலமான புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

சிறைத் துறையின் சிறப்பு அரங்கு...

புதுக்கோட்டை பாஸ்டல் பள்ளி மற்றும் மாவட்ட சிறை வளாகத்தில் சிறைவாசிகளுக்கான நூலகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், அந்த நூலகத்துக்கு நூல்களைத் தர விரும்பும் புத்தகப் பிரியர்கள் நூல்களை வாங்கி, வழங்கும் வகையில் தனியே ஓர் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

அஞ்சல் துறையின் சிறப்பு அரங்கு...

தாங்கள் விரும்பும் நபர்களுக்கு புத்தகங்களைப் பரிசாக அனுப்பி வைக்க விரும்புவோர், புத்தகத்தை வாங்கிக் கொடுத்தால் இலவசமாக பொட்டலமிட்டு, குறைந்த கட்டணத்தில் பார்சலாக அனுப்பி வைப்பதற்காக அஞ்சல் துறை சார்பில் தனியே ஓர் அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது.

புத்தகத் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் கவிஞர் தங்கம் மூர்த்தி, அறிவியல் இயக்க மாநிலச் செயலர் எஸ்.டி. பாலகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் மா. வீரமுத்து, மாவட்டச் செயலர் மு. முத்துக்குமார் உள்ளிட்டோரும் செய்திருந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com