தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அரசு பேருந்து மீது டாரஸ் லாரி மோதி விபத்து: மேம்பாலத்தின் பக்கவாட்டில் தொங்கும் அரசு பேருந்தால் பரபரப்பு!

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடம் அருகே அரசு பேருந்து மீது டாரஸ் லாரி மோதிய விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

News image

வண்டலூர் வாலாஜாபாத் சாலையில் உள்ள மேம்பாலம் அருகே அரசு பேருந்து மீது டாரஸ் லாரி வேகமாக மோதியதில் மேம்பாலத்தின் பக்கவாட்டில் அந்தரத்தில் தொங்கும் அரசு பேருந்து

Updated On :28 ஜூலை 2023, 6:39 am

DIN

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடம் அருகே அரசு பேருந்து மீது டாரஸ் லாரி மோதிய விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடம் சந்திப்பு வண்டலூர் வாலாஜாபாத் சாலையில் உள்ள மேம்பாலம் அருகே நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது பின்னால் வந்த டாரஸ் லாரி வேகமாக மோதியதில் பேருந்தில் பயணித்த 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மேம்பாலத்தின் அருகே சாலை ஓரத்தில் உள்ள சுவரில் அமர்ந்திருந்த நான்கு பேர் மீது அரசு பேருந்து மோதியதில் நான்கு பேரும் பலத்த காயமடைந்தனர். அரசு பேருந்தின் பின்பக்கம் முழுதுமாக நொறுங்கி பேருந்து மேம்பாலத்தின் பக்கவாட்டில் அந்தரத்தில் தொங்குவதால் பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த ஒரகடம் காவல்துறையினர் லேசான காயமடைந்தவர்களை ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கும், படுகாயம் அடைந்தவர்களை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்தால் வண்டலூர் வாலாஜாபாத் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் போக்குவரத்தை  சரி செய்து வருகின்றனர்.

ஒரடம் காவல்துறையினர் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் ராட்சத கிரேன் மூலம் அந்தரத்தில் தொங்கும் அரசு பேருந்தை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசு பேருந்து மீது டாரஸ் லாரி மோதிய விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்ததுடன் பேருந்து மேம்பாலத்தின் பக்கவாட்டில் அந்தரத்தில் தொங்குவதால் பரபரப்பு நிலவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.