மானாமதுரை முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவில் பால்குட ஊர்வலம்

மானாமதுரை கன்னார் தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் ஆடி முளைப்பாரி உற்சவத்தில் சனிக்கிழமை பக்தர்கள் பால்குடம் சுமந்தும், தீ மிதித்தும் வேண்டுதல் நிறைவேற்றினர். 
வைகை ஆற்றில் இருந்து முத்துமாரியம்மன் கோயிலுக்கு பால்குடம் சுமந்து வந்த பக்தர்கள்.
வைகை ஆற்றில் இருந்து முத்துமாரியம்மன் கோயிலுக்கு பால்குடம் சுமந்து வந்த பக்தர்கள்.

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கன்னார் தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் ஆடி முளைப்பாரி உற்சவத்தில் சனிக்கிழமை பக்தர்கள் பால்குடம் சுமந்தும், தீ மிதித்தும் வேண்டுதல் நிறைவேற்றினர். 

இக்கோயிலில் விஸ்வகர்மா சமூகத்தினர் சார்பில் ஆடி முளைப்பாரி மற்றும் பூச்சொரிதல்  உற்சவ விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் முத்துமாரி அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்று வந்தன. 

வாயில் அலகு குத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.
வாயில் அலகு குத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.

இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நடைபெற்ற பால்குடம் உற்சவத்தை முன்னிட்டு காப்புக்கட்டி விரதம் இருந்து வந்த பக்தர்கள், வைகை ஆற்றில் இருந்து பால்குடம் சுமந்தும் வாயில் அலகு குத்தியும் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். 

அதன் பின்னர் கோயில் எதிரே பரப்பி வைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இந்த பக்தர்கள் தீ மிதித்து வேண்டுதல் நிறைவேற்றினர். அதைத் தொடர்ந்து முத்துமாரி அம்மனுக்கு பாலாபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.

இவ்விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று முத்துமாரியம்மனை தரிசித்தனர். தொடர்ந்து, இன்று (சனிக்கிழமை) மாலை முளைப்பாரி ஊர்வலம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com