நான் தேர்தலில் வெற்றி பெற்று வந்துள்ளேன்: அமித் ஷாவுக்கு உதயநிதி பதிலடி

நான் மக்களைச் சந்தித்து தேர்தலில் வெற்றி பெற்று இந்த நிலைமைக்கு வந்துள்ளதாக அமித் ஷாவுக்கு உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். 
நான் தேர்தலில் வெற்றி பெற்று வந்துள்ளேன்: அமித் ஷாவுக்கு உதயநிதி பதிலடி

நான் மக்களைச் சந்தித்து தேர்தலில் வெற்றி பெற்று இந்த நிலைமைக்கு வந்துள்ளதாக அமித் ஷாவுக்கு உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். 

திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொண்டு பேசினார். தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பின்னர் விழாவில் பேசிய அமைச்சரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், அமித் ஷாவின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாகப் பேசினார். 

'நான் மக்களைச் சந்தித்து தேர்தலில் வெற்றி பெற்று இன்று இந்த பதவிக்கு வந்திருக்கிறேன். அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா எப்படி இந்த நிலைமைக்கு வந்தார்? ஜெய்ஷா கிரிக்கெட் சங்க தலைவராக இருக்கிறாரே, அவர் எத்தனை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினார்? எத்தனை ரன்கள் அடித்தார்? 2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வரும்போது  அமித் ஷா மகன் ஜெய் ஷா நடத்தும் நிறுவனத்தின் மதிப்பு 75 லட்சம் ரூபாயாக இருந்தது. தற்போது 130 கோடியானது எப்படி? மகனைப் பற்றி பேச முடியாமல் அமித் ஷா என்னைப் பற்றி பேசியிருக்கிறார்' என்று கூறினார் உதயநிதி. 

முன்னதாக, உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்க மு.க.ஸ்டாலின் உழைக்கிறார் என்று மத்திய மந்திரி அமித்ஷா நேற்று ராமேசுவரத்தில் பேசியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com