மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

வெயிலுக்கு இதமாக கோயில் முன்பு இளைப்பாறும் குட்டி சிறுத்தை!

வனப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமானதையடுத்து கோயில் முகப்பு நிழலில் இளைப்பாறிய குட்டி சிறுத்தையின் படம் சமூக வலைதளங்களில் பரவலாகி வருகிறது.

News image

வடக்குத்தி அம்மன் கோயிலில் இளைப்பாறும் குட்டி சிறுத்தை

Updated On :7 ஜூன் 2023, 6:28 pm IST

அம்பாசமுத்திரம்: வனப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமானதையடுத்து கோயில் முகப்பு நிழலில் இளைப்பாறிய குட்டி சிறுத்தையின் படம் சமூக வலைதளங்களில் பரவலாகி வருகிறது.

தமிழகத்தில் கோடை அக்னி நட்சத்திரம் முடிந்து ஒரு வாரத்திற்கும் மேலான நிலையில் வெயிலின் தாக்கம் இன்னும் நீடித்து வருகிறது. வெயிலின் தாக்கம் குறையாத நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் நாளை கல்வித் துறை இரண்டு முறை தள்ளிவைத்து உத்திரவிட்டுள்ளது.

இந்நிலையில், வனப்பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகமிருப்பதால் அதிலிருந்து தப்பிக்க வனவிலங்குகள் பல்வேறு வழிகளைக் கையாண்டு வருகின்றன.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டத்திற்குள்பட்ட மாஞ்சோலை தேயிலைத் தோட்டப் பகுதியில் சிறுத்தை, மிளா, காட்டுப் பன்றி, கரடி, யானை உள்ளிட்ட வனவிலங்குள் உள்ளன. மாஞ்சோலை தேயிலைத் தோட்டப்பகுதியில் உள்ள வடக்குத்தி அம்மன் கோயிலுக்கு  சிலர் வழிபட சென்ற போது கோயிலின் முன்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தகர கொட்டகை நிழலில் குட்டி சிறுத்தை ஒன்று ஆசுவாசமாகப் படுத்து இளைப்பாறிக் கொண்டிருந்துள்ளது.

இதைப் பார்த்த பக்தர்கள் பதுங்கியிருந்து சிறுத்தை படுத்திருந்ததை செல்பேசியில் படம் பிடித்துள்ளனர். அந்தப் படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கோயில் முகப்பில் படுத்து இளைப்பாறும் குட்டி சிறுத்தையின் படத்தை சமூக வலைதளங்களில் பரபரப்பாக பகிர்ந்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.