மேக்கேதாட்டுவில் அணை கட்ட புதுவை காங்கிரஸ் எதிர்ப்பு

மேக்கேதாட்டுவில் அணை கட்ட புதுவை காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மேக்கேதாட்டுவில் அணை கட்ட புதுவை காங்கிரஸ் எதிர்ப்பு
Published on
Updated on
1 min read

மேக்கேதாட்டுவில் அணை கட்ட புதுவை காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் அவரது இல்லத்தில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: கடந்த 60 ஆண்டுகளில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியிலிருந்தபோது ரூ.55 லட்சம் கோடி கடன் பெற்றிருந்தது. அதன்படியே உள்கட்டமைப்புகள் மேம்பாடு, வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஆனால், கடந்த 9 ஆண்டில் பிரதமர் நரேந்திரமோடி ரூ.100 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளார். அதனால், நாட்டின் மொத்தக் கடன் தொகை பதினந்தரை லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. பிரதமர் மோடி ஆட்சியில் ரயில்வே, விமானம், மின்விநியோகம், துறைமுகம் என  பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளன.

தவறான பொருளாதாரக் கொள்கையால் கடன் நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் அமைதியாக இருந்த மணிப்பூர் மாநிலத்தில் தற்போது கலவரம் நடந்து வருகிறது. ஆனால், பிரதமர் அங்கு சென்று பார்வையிடவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்திற்கு ரூ.50 ஆயிரம் கோடி நிதியளிக்கப்பட்டதாகவும், தற்போது பாஜக ரூ.2 லட்சம் கோடி அளிதுள்ளதாகவும், உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருப்பது சரியல்ல. மத்திய அரசுக்கான தமிழக வருவாயிலிருந்து திருப்பித்தர வேண்டிய 41% நிதியையே வழங்கியுள்ளனர். அதே நேரத்தில் குஜராத்துக்கு ரூ.4 லட்சம் கோடி கொடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ஜிஎஸ்டி, உதய் திட்டத்தால் தமிழக வருவாய் குறைந்துள்ளதாக
முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஆனால், புதுவைக்கு தேர்தல் நேரத்தில் பிரதமர் அளித்த வாக்குறுதிப்படி நிதி அளிக்கவில்லை. கடந்த 2 ஆண்டுகளில் புதுவைக்கு ரூ.250 கோடியே மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. பதவிக்காக முதல்வர் என்.ரங்கசாமி மத்திய அரசை எதிர்க்கவில்லை. புதுச்சேரி பொலிவுறு நகர்த்திட்டத்தில் ரூ.5 கோடி முறைகேடு நடந்துள்ளது. தமிழகத்தில் பொய்ப் பிரசாரத்தால் ஆட்சிக்கு வரலாம் என்ற பாஜகவின் கனவு பலிக்காது. புதுவை மக்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளனர். 

புதுவையில் புதிய கல்விக் கொள்கையில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது. புதுவை மாநில புதிய காங்கிரஸ் தலைவராக வி.வைத்திலிங்கம் எம்.பி. நியமனம் வரவேற்புக்குரியது. அவருடன் இணைந்து செயல்படுவோம். கர்நாடகத்தில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் மேக்கேதாட்டுவில் அணை கட்டினால் கடைமடைப் பகுதியான புதுவையின் காரைக்கால் பகுதியே பாதிக்கப்படும். ஆகவே கர்நாடகம் காவிரியில் அணை கட்டுவதை  எதிர்க்கிறோம். அப்பிரச்னையில் உச்சநீதிமன்றம் அமைத்த குழு கூடி விரைவில் நல்ல முடிவெடுக்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com