
சென்னை தலைமை செயலகத்திலுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அறையில் நடைபெற்று வந்த அமலாக்கத் துறை சோதனை முடிந்தது. சுமார் 3 மணிநேரம் சோதனை நடைபெற்றது.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் அறைக்கு பலத்த பாதுகாப்புடன் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் இருவர் மற்றும் வங்கி அதிகாரிகள் 3 பேர் சோதனையில் ஈடுபட்டனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக எழுந்த புகாரையடுத்து அவரது வழக்கை உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது.
இதையடுத்து கடந்த மே மாதம் 26-ம் தேதி முதல் ஜூன் 2-ம் தேதி வரை வருமான வரித் துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் உறவினர்கள் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.