அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த பாதிப்பும் இல்லை: நயினார் நாகேந்திரன்

அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த பாதிப்பும் இல்லை என்று தமிழக பாஜக  சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த பாதிப்பும் இல்லை: நயினார் நாகேந்திரன்
Published on
Updated on
1 min read

அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த பாதிப்பும் இல்லை என்று தமிழக பாஜக  சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

நெல்லை சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் தமிழக பாஜக  சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

அமலாக்கத்துறை எடுத்துள்ள நடவடிக்கை பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு. உச்சநீதிமன்றம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில குற்றப்பிரிவு  காவல்துறைக்கு எச்சரிக்கை கொடுத்தும், அவர்கள் நடவடிக்கை எடுக்காத நிலையில் நீதிமன்றம் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என எச்சரித்ததையடுத்து,  இந்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. 

ஏற்கனவே வருமான வரித் துறை  தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான இடங்களில் சோதனை செய்யப்பட்ட பின்னர் கிடைத்த தகவலின் அடிப்படையில், அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போதைய தமிழக முதலமைச்சரே செந்தில் பாலாஜி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அமித்ஷா வந்ததற்கும் தற்போது உள்ள நடவடிக்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்தார். அதிமுக பாஜக கட்சி இடையே பேச்சளவில் கருத்து வேறுபாடு வந்துள்ளது. கூட்டணிக்கு இதனால் எந்த பாதிப்பும் இல்லை. பத்திரிகையாளர்களின் கேள்விக்கு மாநில தலைவர் அண்ணாமலை முன்னாள் முதலமைச்சர் குறித்த தகவல்களை பதிவு செய்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து அவதூறாக எந்த கருத்துக்களையும் அவர் தெரிவிக்கவில்லை. 

அதிமுகவுடன் கூட்டணி வேண்டும், வேண்டாம் என்பதை பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் மாநிலத் தலைவர் அண்ணாமலை 3 பேரும் சேர்ந்து தான் முடிவு எடுப்பார்கள். அதிமுக பொதுச் செயலாளரும் பிரதமர், அமித்ஷா, ஜே.பி நட்டா ஆகியோர் கூட்டாக சேர்ந்து தான் முடிவெடுக்க முடியும். 

முன்பு தமிழர் ஒருவர் பிரதமராக வரும் வாய்ப்பு இருந்து எப்படி தவறிப் போனது என்பதை அனைவருக்கும் தெரியும். அகில இந்திய அளவில் 2024 தேர்தலில் வென்று  பிரதமராக நரேந்திர மோடி வருவார். அதன் பின்பு வரும் தேர்தலில் தமிழகத்தை சேர்ந்த யார் வந்தாலும் மிகுந்த மகிழ்ச்சி. 

தலைமை அனுமதித்தால் நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் நான் போட்டியிடுவேன். அதிமுக பாஜக கூட்டணி என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்று. எந்த நேரத்தில் யார் வேட்பாளராக அறிவித்தாலும் ஒருங்கிணைந்து வெற்றிக்கான பணிகளை செய்வோம். நாள்தோறும் கட்சினர் ஒவ்வொருவர் சொல்லும் வார்த்தையை வைத்து கூட்டணி தொடர்பான இறுதி முடிவு எடுக்கக் கூடாது எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com