/

திமுகவை ஊழல் கட்சியென நிரூபிக்க பாஜக முயற்சி: அமைச்சர் மா.சுப்பரமணியன்

திமுகவை ஊழல் கட்சியென நிரூபிக்க பாஜக முயற்சிப்பதாக அமைச்சர் மா.சுப்பரமணியன் தெரிவித்தார்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 7:07 pm

DIN

திமுகவை ஊழல் கட்சியென நிரூபிக்க பாஜக முயற்சிப்பதாக அமைச்சர் மா.சுப்பரமணியன் தெரிவித்தார்.

சென்னை தேனாம்பேட்டை சாலையில் அமைந்துள்ள அண்ணா அறிவாலயம் வளாகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது, செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் தொந்தரவு செய்ததாக அமைச்சர் குற்றம் சாட்டினார். 

மேலும், செந்தில் பாலாஜியை சுமார் 18 மணி நேரத்துக்கும் மேல் அடைத்து வைத்து தொந்தரவு செய்ததாகவும், செந்தில் பாலாஜி கைது என்பது ஜனநாயக படுகொலை என்றும், கைதின் சட்டவிதிகள் முறையாக பின்பற்றப் படவில்லை எனவும் கூறினார். 

அவர், திமுக ஊழல் கட்சி என்ற போலி கருத்தை நிரூபிக்க பாஜக முயற்சிப்பதாகவும், திமுக மட்டுமின்றி அதிமுகவையும் மிரட்ட விசாரணை அமைப்புகளை பாஜக பயன்படுத்துவதாக அவர் குற்றம் சாடியுள்ளார். 

மேலும், திமுக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு அமலாக்கத்துறை தான் காரணம் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்பரமணியன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.