/

தங்கம் விலை அதிரடியாக குறைந்தது: மக்கள் மகிழ்ச்சி!

சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.320 அதிரடியாக குறைந்துள்ளது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 7:07 pm

DIN

சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.320 அதிரடியாக குறைந்துள்ளது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தங்கம் விலை உயர்வதும், குறைவதும் அவ்வப்போது நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த ஏப்ரலில் இருந்தே தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வருகிறது.

அதன்படி, சென்னையில் வாரத்தின் மூன்றாம் நாளான இன்று காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.320 குறைந்து, ரூ.44,400-க்கும், ஒரு கிராம் ரூ.40 குறைந்து ரூ.5,550-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

அதேசமயம், வெள்ளியின் விலையும் இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் ரூ.70 காசுகள் குறைந்து ரூ.78.50-க்கும் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.78,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.