
களக்காடு: திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே ஆட்டோ மீது லாரி மோதியதில் ஆட்டோ ஓட்டுநர் பலியானார்.
களக்காடு அருகேயுள்ள மூங்கிலடியைச் சேர்ந்த ஆதம் அலி மகன் ரபிக் (48). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் புதன்கிழமை பகல் ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு களக்காடு - நான்குனேரி பிரதான சாலையில் களக்காடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.
ஆட்டோ பாட்டப்பிள்ளை மதகு அருகே வந்த போது, களக்காட்டில் இருந்து நான்குனேரி நோக்கி சென்ற சுமை லாரி பலமாக ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் களக்காடு அரசு மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். காயமடைந்த 3 பேர் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதையும் படிக்க: செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28 வரை நீதிமன்றக் காவல்!
இவ்விபத்து குறித்து களக்காடு காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.