விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

நடுக்கடலில் படகு மூழ்கி விபத்து: 4 மீனவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதி

நடுக்கடலில் படகு மூழ்கிய விபத்தில், 3 மணி நேரம் உயிருக்கு போராடிய 4 மீனவர்களை, சக மீனவர்கள் மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

News image
நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள மீனவர்கள்.
Updated On :15 ஜூன் 2023, 7:33 am

DIN

நாகை: நடுக்கடலில் படகு மூழ்கிய விபத்தில், 3 மணி நேரம் உயிருக்கு போராடிய 4 மீனவர்களை, சக மீனவர்கள் மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

61 நாள்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து நேற்று நள்ளிரவு நாகை துறைமுகத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க புறப்பட்டு சென்றனா். 

நாகை மாவட்டம் கீச்சாங்குப்பத்தில் இருந்து அஞ்சப்பன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே கிராமத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் 10, நாட்டிக்கல் மைல் தொலைவில் வியாழக்கிமை அதிகாலை 3 மணி அளவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, கடலில் வேகமாக காற்று வீசியதுடன், அங்கு எழுந்த ராட்சத அலை எழுந்துள்ளது. இதில் விசைப்படகின் உள்ளே தண்ணீர் புகுந்து, படகு மீனவர்களுடன் கடலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த  நான்கு மீனவர்களும் டீசல் கேன்களை பிடித்துக் கொண்டு சுமார் மூன்று மணி நேரம் நடுக்கடலில் நீந்தியவாறு உயிருக்கு கடலில் தத்தளித்தனா். 

Story image

பாதிக்கப்பட்ட மீனவர்களை அரசு மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறிய மீன் வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன்.

கடலில் தத்தளித்த கீச்சாங்குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் ஆறுமுகம், மைக்கேல், சந்தோஷ், கண்ணன் ஆகியோரை அவ்வழியே மீன்பிடிக்கச் சென்ற அக்கரைப்பேட்டை மீனவர்கள் காப்பாற்றி கரை சேர்த்தனர். 

தொடர்ந்து மீனவர்கள் 4 பேரையும் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதேபோன்று, கீச்சாங்குப்பத்தை சேர்ந்த ரத்தினம், அவரது தந்தை குஞ்சாலு, சகோதரர் சிவக்குமார் ஆகியேருடன் அதிகாலை கடலில் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்தார். மீன்களை படகில் ஏற்றும் போது, திடீரென எழுந்த ராட்சத அலை அவரது படகையும் ஒரு பக்கம் சாய்த்து நடுக்கடலில் மூழ்கியுள்ளது. விபத்தில் சிக்கி நடுக்கடலில் உயிருக்கு போராடிய மூவரையும். சக மீனவர்கள் மீட்டு நாகை துறைமுகம் அழைத்து வந்தனர்.

Story image

இதனிடையே பாதிக்கப்பட்ட மீனவர்களை மீன் வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் அரசு மருத்துவமனைக்கு சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். 

நடுக்கடலில் மூழ்கியுள்ள 2 படகுகளை மீட்க, கீச்சாங்குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் 12 பேர் இரண்டு பைபர் படகு, ஒரு விசைப்படகு மூலம் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.