திருப்பூர்: அரசு பேருந்து மோதி ஒருவர் பலி!
திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் அரசுப்பேருந்து மோதி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


திருப்பூர்: திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் அரசுப்பேருந்து மோதி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கோவை செல்லும் அரசு பேருந்து சனிக்கிழமை இரவு 11.30 மணி அளவில் புறப்பட்டது. அப்போது அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்தவர் மீது பேருந்து எதிர்பாராதவிதமாக மோதியது.
இந்த விபத்தில் திருப்பூர் முத்தனம்பாளையத்தைச் சேர்ந்த பாலு (45) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து திருப்பூர் தெற்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தாராபுரத்தைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநரான ஈஸ்வரன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...