தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!
தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளராக பீலா ராஜேஷும், சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநராக ஆசியா மரியம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வணிகவரித்துறை கூடுதல் ஆணையராக வீர் பிரதாப் சிங், பட்டு வளர்ப்புத்துறை இயக்குநராக சந்திரசேகர் சகாமுரி மற்றும் கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளராக விஜயா ராணி மாற்றப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க | இந்தியன் 2 ரிலீஸ் தேதி குறித்து தகவல்!
அதேபோல், நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகளின் தலைவராக விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இவருக்கு அடையார் - கூவம் மறுசீரமைப்பு திட்ட சிறப்பு அதிகாரி பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

