தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

கடலூர் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 6-ஆக உயர்வு

கடலூரில் இரண்டு தனியார்  பேருந்துகள் திங்கள்கிழமை நேருக்குநேர் மோதிக் கொண்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது.

News image
Updated On :20 ஜூன் 2023, 6:51 am

DIN

கடலூர்: கடலூரில் இரண்டு தனியார்  பேருந்துகள் திங்கள்கிழமை நேருக்குநேர் மோதிக் கொண்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது.

கடலூரிலிருந்து திருவண்ணாமலை சென்ற பேருந்தும் பண்ருட்டியிலிருந்து புதுச்சேரி சென்ற பேருந்தும் இன்று நேருக்குநேர் மோதியதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட 96-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

சம்பவ இடத்திலேயே 4 பேர் பலியான நிலையில், மருத்துவமனையில் நேற்று ஒருவர் பலியானார். இந்நிலையில், சிகிச்சை பலனின்று இன்று மேலும் ஒருவர் பலியான நிலையில் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது.

பண்ருட்டியிலிருந்து புதுச்சேரி சென்ற தனியார் பேருந்தின் முன்பக்க டயர் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து எதிரே வந்த மற்றொரு பேருந்தின் மீது நேருக்குநேர் மோதியததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.