நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

News image

கோப்புப்படம்

Updated On :20 ஜூன் 2023, 6:32 am

DIN

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று தனது 65 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். 

அந்தவகையில்  முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், 'குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல உடல்நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழவும் பொது வாழ்க்கைக்கு ஊக்கமளிக்கும் வகையில் வாழ்த்துகிறேன்' என்று பதிவிட்டுள்ளார். 

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். 

அவர் தனது பதிவில், குடியரசுத் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நமது மக்களின் நலனுக்கான அறிவு, கண்ணியம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் கலங்கரை விளக்கமாக, தேசத்தின் முன்னேற்றத்திற்கு அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக அவர் பாராட்டப்படுகிறார். அவரது அர்ப்பணிப்பு நம் அனைவருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது. அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன்' என்று கூறியிருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.