மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க முடியவில்லை என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி மாரடைப்பு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் செந்தில் பாலாஜி, ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கக்கோரிய மனு, அவரது இடைக்கால ஜாமீன் மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
தற்போது அமலாக்கத்துறை காவலில் செந்தில் பாலாஜி உள்ள நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவரை காவலில் எடுக்க விசாரிக்க முடியவில்லை என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
செந்தில் பாலாஜி மனைவியின் ஆள்கொணர்வு மனுவுக்கு எதிராக அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.
இதையும் படிக்க | கலைஞர் கோட்ட திறப்பு விழா: நிதீஷ் குமார் வருகை ரத்து
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
நிலத்தகராறில் அண்ணன் கொலை: தம்பி கைது

அரசுப் பள்ளியில் தூய்மை இயக்க விழிப்புணா்வு

தமிழக வெற்றிக் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தருமபுரியில் பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை தடையின்றி கிடைக்க ஏற்பாடு
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

