தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு, செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குதல் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வு, சட்டம்-ஒழுங்கு சீா்கேடுகள் முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும், அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள திமுக அமைச்சா் செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் இன்று(புதன்கிழமை) அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் ஒவ்வொரு பகுதியிலும் தலைமைக் கழக நிா்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
மேலும் அதிமுக முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள், மாவட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர்.
திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள ஒருவர் அமைச்சரவையில் நீடிக்க முடியாது உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிக்க | அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நிறைவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அர்ஜுன் டெண்டுல்கர் - சானியா திருமணம்! எம்.எஸ். தோனி, ஷாருக் கான், அம்பானி உள்பட பிரபலங்கள் பலர் பங்கேற்பு!

இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?

ஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!
ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடி
வீடியோக்கள்

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் ஆர்ச்சரின் சவாலைச் சமாளிப்பாரா சஞ்சு ?
தினமணி வீடியோ செய்தி...

