தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

செம்பனார்கோவிலில் பொது இ-சேவை மையம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் பொது இ- சேவை மையம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  தொடங்கி வைத்தார்.

News image

செம்பனார்கோவிலில் பொது இ- சேவை மையத்தை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 

Updated On :21 ஜூன் 2023, 9:02 am

தரங்கம்பாடி: மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் பொது இ- சேவை மையம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  தொடங்கி வைத்தார்.

செம்பனார்கோவில் பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை அலுவலகம் அருகில் பூம்புகார் தொகுதி பொதுமக்களின் குறையாக தெரிவிக்கும் தமிழக அரசின் உதவி  எண் மற்றும் பொது இ- சேவை மையம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பொது இ- சேவை மையத்தை திறந்து வைத்து பணியைத் தொடங்கி வைத்தார்.

இதில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ. ராமலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் நிவேதா எம். முருகன், பன்னீர்செல்வம்,ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், தஞ்சை மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பி.எம். ஸ்ரீதர், மாவட்ட திமுக துணை செயலாளர் ஞானவேலன், அமிர்த, விஜயகுமார், அப்துல் மாலிக் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செம்பனார்கோவிலில் பொது இ-சேவை மையத்தை தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.