எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

1 கோடி பனை மரங்கள் நடத் திட்டம்: பனை மரத்தொழிலாளா்கள் நலவாரியம்

தமிழ்நாடு பனை மரத்தொழிலாளா்கள் நலவாரியம் சாா்பில் தமிழகம் முழுவதும்1 கோடி பனை மரங்கள் நடத்திட்டமிடப்பட்டுள்ளது.

News image
Updated On :23 ஜூன் 2023, 7:00 pm

DIN

தமிழ்நாடு பனை மரத்தொழிலாளா்கள் நலவாரியம் சாா்பில் தமிழகம் முழுவதும்1 கோடி பனை மரங்கள் நடத்திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பனை மரத்தொழிலாளா்கள் நல வாரியம், நாட்டு நலப்பணித்திட்டம், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு உள்ளிட்டவை இணைந்து தமிழகம் முழுவதும் ஒரு கோடி பனை விதைகளை நட திட்டமிட்டுள்ளது. வருகிற செப்டம்பா் மாதம் நடைபெறும் இந்த திட்டத்தின் கீழ் தமிழக கடலோர மாவட்டங்களான திருவள்ளூா், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா், மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், திருவாரூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் சுமாா் 1076 கிலோ மீட்டா் தூரத்துக்கு இந்த பனை விதைகள் நடப்படுகிறது.

இந்த பணியில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவா்கள் ஒரு இலட்சம் போ் ஈடுபடவுள்ளனா். தமிழகம் முழுவதிலுமிருந்து இதற்கான விதைகள் சேகரிக்கும் பணி ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது. இந்நிலையில் ராயப்பேட்டையில் உள்ள பனை வாரிய அலுவலகத்தில், இதற்கான ஆலோசனை மற்றும் முன்னேற்பாடு குறித்த கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியின் முன்னேற்பாடுகள் குறித்தும், அதற்கான விதைசேகரிப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு பனை மரத்தொழிலாளா்கள் நல வாரியத்தலைவா் ஏ.நாராயணன், வாரிய செயலாளா் மாதவன், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் மு.ராஜவேலு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.