மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

எழுத்தாளர் உதயசங்கருக்கு பால புரஸ்கார் சாகித்ய விருது!

'ஆதனின் பொம்மை' நாவலுக்காக எழுத்தாளர் உதயசங்கருக்கு பால புரஸ்கார் சாகித்ய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :23 ஜூன் 2023, 10:50 am

DIN

'ஆதனின் பொம்மை' நாவலுக்காக எழுத்தாளர் உதயசங்கருக்கு பால புரஸ்கார் சாகித்ய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

குழந்தைகள் இலக்கியத்திற்கான 2023 ஆம் ஆண்டின் பால புரஸ்கார் சாகித்ய விருது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியில் எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய 'ஆதனின் பொம்மை' என்ற நாவல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி கோவில்பட்டியைச் சேர்ந்த எழுத்தாளர் உதயசங்கர் கவிதை, சிறுகதை, குறுநாவல், சிறுவர் இலக்கியம், கட்டுரை மற்றும் மொழிபெயர்ப்பு நூல்கள் என 1980-இல் துவங்கி கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேல் இலக்கிய உலகில் எழுதிக்கொண்டிருப்பவர்.

Story image

1960 ஆம் ஆண்டு பிறந்த இவர், தனது 20 ஆவது வயதில் கவிதை எழுதத் துவங்கினார். 1990-களில் குழந்தை  இலக்கியத்தில் தடம்பதித்து குழந்தைகளுக்கான கதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு நூல்கள் என இன்றும் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 100-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 

மாயாவின் பொம்மை, புலிக்குகை மர்மம், பொம்மைகளின் நகரம், அலாவுதீனின் சாகசங்கள் உள்ளிட்ட குழந்தை இலக்கியங்கள் குறிப்பிடத்தக்கவை. 

மேலும் ஆங்கிலம், மலையாள மொழிகளில் இருந்து பல நூல்களை மொழிபெயர்த்துள்ளார். தன் படைப்புகளுக்காக பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.