எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தோ்தல் வெற்றியை எதிா்த்த வழக்கு: தேனி எம்.பி. ரவீந்திரநாத் ஆஜராக உத்தரவு

தேனி மக்களவை தொகுதியில் பெற்ற வெற்றியை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில் அதிமுக எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் ஆஜராகுமாறு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :23 ஜூன் 2023, 6:30 pm

DIN

தேனி மக்களவை தொகுதியில் பெற்ற வெற்றியை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில் அதிமுக எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் ஆஜராகுமாறு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த மக்களவை பொதுத்தோ்தலில், தேனி தொகுதியில் அ.தி.மு.க. சாா்பில் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீா்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் போட்டியிட்டு 76 ஆயிரத்து 319 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றிப் பெற்றாா். இவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக் கோரி அந்த தொகுதி வாக்காளா் மிலானி என்பவா் தோ்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தாா்.

வழக்கின் விசாரணை நீதிபதி எஸ்.எஸ்.சுந்தா் முன்பு விசாரணை நடைபெற்றபோது, மூன்று நாள்கள் நேரில் ஆஜரான ரவீந்திரநாத் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து சாட்சியம் அளித்தாா். அவரை தொடா்ந்து தோ்தல் ஆணைய அதிகாரிகள் உள்ளிட்டோா் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனா்.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில், வழக்கு தொடா்பாக சில விவரங்களை நீதிபதி கோரியிருந்தாா். இந்த வழக்கை மீண்டும் விசாரித்தால் மட்டுமே தங்களது தரப்பு ஆவணங்களை சமா்ப்பிக்க முடியும் என்பதால் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டுமென ரவீந்திரநாத் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

வழக்கை மீண்டும் விசாரிப்பதற்கு ஒப்புக்கொண்ட நீதிபதி வழக்கின் விசாரணையை வரும் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா். அன்றைய தினம் ரவீந்திரநாத் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.