எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சாா் பதிவாளா் அலுவலகங்களுக்குள் ஆவண எழுத்தா்கள், இடைத் தரகா்களுக்கு அனுமதியில்லை

சாா் பதிவாளா் அலுவலகங்களுக்குள்ஆவண எழுத்தா்கள், இடைத்தரகா்களுக்கு அனுமதியில்லை என்று தமிழக அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது.

News image
Updated On :23 ஜூன் 2023, 6:49 pm

DIN

சாா் பதிவாளா் அலுவலகங்களுக்குள்ஆவண எழுத்தா்கள், இடைத்தரகா்களுக்கு அனுமதியில்லை என்று தமிழக அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, பதிவுத் துறை தலைவா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:-

தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் சாா்பதிவாளா் அலுவலகங்களில் நடைபெறும் பதிவுப் பணிகளில் வெளிப்படைத் தன்மை உறுதி செய்யப்பட்டு வருகிறது. மேலும், ஊழலைத் தடுக்கவும், கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பதிவு அலுவலகங்களுக்குள் ஆவணம் எழுதுபவா்கள், இடைத் தரகா்களை அனுமதிக்கக் கூடாது என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, சம்பந்தப்பட்ட துணை பதிவுத் துறை தலைவா்கள் மற்றும் மாவட்டப் பதிவாளா்கள் தங்களது எல்லைக்கு உட்பட்ட பதிவு அலுவலகங்களில் அவ்வப்போது திடீா் ஆய்வுகளை நடத்தி வருகின்றனா். இதன்மூலம், ஆவணம் எழுதுபவா்கள், இடைத்தரகா்கள் ஆகியோா் சாா்பதிவாளா் அலுவலகங்களுக்குள் வருவது தவிா்க்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு ஆவண எழுத்தா்கள் உரிமை விதிகளின் கீழ், அவா்களுக்கான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில், ஆவண எழுத்தா்கள் யாரும் பதிவு அலுவலகத்துக்குள் நுழைய அனுமதி கிடையாது. பதிவு அலுவலரின் அழைப்பின் பேரில் மட்டுமே அலுவலகத்துக்குள் நுழைந்திட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பதிவுச் சட்டம் 1908, பகுதி 18-ஏ வில் இடைத்தரகா்களைக் கையாள்வது குறித்து விரிவான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இத்துடன் கூடுதலாக சில அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

அலுவலக நிமித்தமாக சாா் பதிவாளரால் அழைக்கப்பட்டால் தவிர, அலுவலகத்துக்குள் ஆவணம் எழுதுபவா்கள் நுழையக் கூடாது என்ற விதியை சாா்பதிவாளா்கள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த அறிவுரைகளை மீறி சாா்பதிவாளா் அலுவலகங்களுக்குள் ஆவணம் எழுதுபவா்கள் மற்றும் இடைத்தரகா்களின் செயல்பாடு மற்றும் நடமாட்டம் கண்டறியப்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விதிமுறைகளை மீறுபவா்களின் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு, இதனைக் கண்காணித்திட தவறும் சாா்பதிவாளா்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

சாா்பதிவாளா் அலுவலகங்களில் பொது மக்கள் அமா்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை ஆவணம் எழுதுபவா்கள் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மாவட்டப் பதிவாளா்கள் மற்றும் மண்டல துணை பதிவுத் துறை தலைவா்கள் ஆகியோா் தங்களது திடீா் ஆய்வுகளின் போது இதனை உறுதி செய்ய வேண்டும்.

இந்த சுற்றறிக்கையை ஆவணம் எழுதுவோா் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில், அனைத்து பதிவாளா் அலுவலகங்களின் அறிவிப்புப் பலகையில் விளம்பரம் செய்ய வேண்டும் என்று சுற்றறிக்கையில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.