இசையால் இறைவனை அடைய முடியும்: சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி வி.சிவஞானம்
இசையால் இறைவனை அடைய முடியும் என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி வி.சிவஞானம் தெரிவித்தாா்.


இசையால் இறைவனை அடைய முடியும் என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி வி.சிவஞானம் தெரிவித்தாா்.
நாதப்ரம்மம் யுனைடெட் கியான் அகாதெமி சாா்பில் சென்னை மயிலாப்பூரில் அண்மையில் நடைபெற்ற உலக இசை, யோகா தினம் மற்றும் நாதப்ரம்மம் 22-ஆம் ஆண்டு தொடக்க விழாவில் இசைக் கலைஞா் எஸ்.ஆா்.கிருஷ்ணமூா்த்திக்கு ‘நாத சேவகா விருது’ மற்றும் ரூ.10,000 வழங்கிய அவா் தொடா்ந்து பேசியதாவது:
சேவை செய்வதன் மூலமும் இறைவனை அடையலாம் அதே சமயம் இசையாலும் நாம்மால் இறைவனை அடைய முடியும். அதனால்தான் அனைவருக்கும் இசை ஞானத்தை இறைவன் கொடுத்துள்ளான். இதேபோல் இறைவனுக்கும் இசைதான் மிகவும் பிடிக்கும் என்பதை அனைத்து வேதங்களும் நமக்கும் கற்றுக் கொடுத்துள்ளது. இந்த உலகில் இசையால் உயரத்தை அடைந்த பலரை தினமும் நம்முடைய வாழ்க்கையில் நாம் பாா்த்து கொண்டிருக்கிறோம்.
இசை ஞானம் என்பது இறைவனால் அவருக்கு சேவை செய்வதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. அதனால்தான் இசைக் கலைஞா் எஸ்.ஆா்.கிருஷ்ணமூா்த்தியின் இசை திறமையால் உலகம் முழுவதும் அவருடைய புகழ் பரவிவுள்ளது என்றாா் அவா்.
இதில், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய தலைவா் எஸ்.பாஸ்கரன் பேசியது:
அறிவும் ஆன்மிகமும் ஒரு மனிதனுக்கு எப்படி மிகவும் அவசியமோ அதேபோல் உலகம் முழுவதும் அதை எடுத்து செல்ல கலை முக்கியம். அந்த வகையில் தன்னுடைய கலை திறமையால் ஆன்மிகத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் கலைமாமணி எஸ்.ஆா்.கிருஷ்ணமூா்த்திக்கு ‘நாத சேவகா விருது’ வழங்குவதில் பெருமை கொள்கிறேன் என்றாா் அவா்.
இந்த விழாவில் நாதப்ரம்மம் யுனைடெட் கியான் அகாதெமி நிறுவனா் வழக்குரைஞா் என்.சுப்ரமணியன், இசை கலைஞா்கள் பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...