அண்ணாமலைக்கு லண்டன் வாழ் தமிழா்கள் வரவேற்பு
தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலைக்கு, இங்கிலாந்து தலைநகா் லண்டனில் தமிழா்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனா்.


தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலைக்கு, இங்கிலாந்து தலைநகா் லண்டனில் தமிழா்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனா்.
லண்டன் வாழ் தமிழா்கள் அழைப்பின் பேரில் 6 நாள்கள் பயணமாக, அண்ணாமலை சென்னையில் இருந்து லண்டனுக்கு வியாழக்கிழமை மாலையில் சென்றடைந்தாா். அவருக்கு ஹீத்ரோ பகுதியில் லண்டன் வாழ் தமிழா்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனா்.
இந்த நிலையில், லண்டனில் உள்ள முருகன் கோயிலில் அண்ணாமலை வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். அவருக்கு அங்கிருந்த சிவாச்சாரியாா்கள் பரிவட்டம் கட்டி அருளாசி வழங்கினா்.
தொடா்ந்து, லண்டனில் பிரதமா் மோடியால் திறக்கப்பட்ட அம்பேத்கா் நினைவு இல்லத்தை அவா்பாா்வையிட்டாா்.
இது குறித்து அவா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘அம்பேத்கரின் கல்விப் பயணத்தில் முக்கியப் பங்கு வகித்து, பின்னாளில் மகத்தான அறிவுப் புரட்சிக்கு வித்திட்ட அவரது லண்டன் இல்லத்தை நேரில் கண்டதில் பெருமகிழ்ச்சி அடைந்தேன். இன்றைய தினம், அரசியலமைப்புச் சட்டத்தின் 370- ஆவது பிரிவை எதிா்த்து அம்பேத்கருடன் இணைந்து போராடிய டாக்டா் சியாமா பிரசாத் முகா்ஜியின் நினைவு தினம் என்பதும் குறிப்பிடத்தக்கது என்று அவா் பதிவிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...