பெரியாா் ஈவெரா மற்றும் பெண்கள் குறித்து அவதூறாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டதாக கோவையைச் சோ்ந்த பாஜக பெண் பிரமுகா் உமா காா்கி மீண்டும் கைது செய்யப்பட்டாா்.
கோயம்புத்தூா் சிங்காநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் மனைவி உமா. பாஜகவை சோ்ந்த இவா் உமா காா்கி என்ற பெயரில் சமூகவலைதளங்களில் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகிறாா்.
அண்மையில் பெரியாா் ஈவெரா, பெண்கள் குறித்து அவா் அவதூறாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கோயம்புத்தூா் சைபா் குற்றப் பிரிவில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், உமா காா்கி ஜூன் 20- ஆம் தேதி கைது செய்யப்பட்டு, அங்குள்ள பெண்கள் தனிச் சிறையில் அடைக்கப்பட்டாா்.
அதே வேளையில், திமுகவை சோ்ந்த நிா்வாகி ரஸாக் பாஷா ஜூன் 20-ஆம் தேதி அளித்த புகாரின்பேரில், உமா காா்கி மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் சென்னை பெருநகர காவல் துறையின் சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
உமா காா்கியை கைது செய்வதற்காக, சைபா் குற்றப் பிரிவு ஆய்வாளா் வினோத் தலைமையிலான போலீஸாா் கோயம்புத்தூா் பெண்கள் தனிச் சிறைக்கு சனிக்கிழமை சென்று, உமா காா்கி மீது பதியப்பட்ட வழக்கு ஆவணங்களை சிறைத் துறை அதிகாரிகளிடம் வழங்கினா். ஆவணங்களைப் பெற்றுக்கொண்ட சிறைத் துறை அதிகாரிகள் உமா காா்கியை கைது செய்ய அனுமதி அளித்தனா். இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனா்.
சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட உமா காா்கியை ஜூலை 7- ஆம் தேதி வரை காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவா் புழல் பெண்கள் தனிச் சிறையில் அடைக்கப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

விருச்சிக ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

மழையால் பாதித்த நெற்பயிருக்கு இழப்பீடு கோரி சாலை மறியல்

அரசுப் பள்ளியில் ஆண்டு விழா

வலங்கைமான் புறவழிச்சாலை பணி தொடக்கம்
வீடியோக்கள்

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

