ஒரேநாளில் 2,000 பேருக்கு முதல்வர் பணி ஆணை வழங்குவார்: மா. சுப்பிரமணியன் தகவல்

1,021 மருத்துவர்களுக்கும் 980 மருந்தாளுநர்களுக்கும் என ஒரேநாளில் 2,000 பேருக்கு முதல்வர் பணி ஆணை வழங்குவார் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
ஒரேநாளில் 2,000 பேருக்கு முதல்வர் பணி ஆணை வழங்குவார்: மா. சுப்பிரமணியன் தகவல்

கோவை: 1,021 மருத்துவர்களுக்கும் 980 மருந்தாளுநர்களுக்கும் என ஒரேநாளில் 2,000 பேருக்கு முதல்வர் பணி ஆணை வழங்குவார் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

கோவை அரசு மருத்துவமனையில் உள்நோயாளி பிரிவின் கட்டண அறை திறப்பு, விஷ முறிவு சிறப்பு மருத்துவ மாநில பயிற்சி மையம் ஆகியவற்றை திறந்து வைத்த சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, அவர் பேசுகையில், 'நிதி நிலை அறிக்கையில் 110 அறிவிப்பு அறிவிக்கப்பட்டது. மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்க இதய பாதுகாப்பு மருந்து வழங்கும் நிகழ்வு நடைபெறுகிறது. கோவை மதுக்கரை மலுமிச்சம்பட்டி கிராமத்தில் இந்த திட்டம் துவங்கப்படுகிறது. 3 கோடியே 37 லட்சத்தில் இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது. பாம்பு கடி, நாய் கடியால் பாதிக்கப்படும் நபர்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை வழங்கப்படுகிறது. 30 ஆயிரம் செவிலியர்களுக்கு விஷக்கடிக்கான பயிற்சி கோவை அரசு மருத்துவமனையில் வழங்கப்படுகிறது.

மாநில அளவிலான மையமாக கோவை அரசு மருத்துவமனை உள்ளது. 8,713 துணை சுகாதார நிலையங்கள், 2,206 ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்களிலும் இதய பாதுகாப்புக்கான மருந்து கையிருப்பு வைக்கப்படும். இதய பாதுகாப்பு மருந்து வழங்கப்படும். கரோனாவுக்குப் பிறகு மாரடைப்பு அதிகரிக்கிறது என தெரிவித்தத்தன்பேரில் இதய பாதுகாப்புத் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

பாம்பு கடி, நாய் கடியால் 2 ஆண்டுக்கு முன்பு வரை வட்டார அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை அரசு, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மட்டுமே மருந்துகள் இருந்தன. தற்போது ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் என 2,286 மையங்களில் பாம்பு கடி, நாய் கடி மருந்துகள் இருப்பு உள்ளன.

இந்த நிலையில் அந்த மருந்தை எப்படி கையாள வேண்டும் என்பதற்கான பயிற்சி கோவை அரசு மருத்துவமனையில் செவிலியர்களுக்கு வழங்கப்படுகிறது.  இதனால் கோவை அரசு மருத்துவமனை மாநில அளவிலான பயிற்சி மையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 30,000 செவிலியர்கள் இந்த பயிற்சியில் ஈடுபடுகின்றனர். கோவையில் 26 அறைகளுடன் கூடிய கட்டண சிகிச்சை அறை துவங்கப்பட்டுள்ளது.

சேலம், கோவையில் நிதிநிலை அறிக்கையில் கட்டண வார்டு துவங்கப்படும் என அறிவித்து துவங்கப்பட்டுள்ளது. சூப்பர் டீலக்ஸ், டீலக்ஸ், சாதாரண வார்டு என வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஹெல்ப் டெஸ்க்  உருவாகி வருகிறது. கோவை அரசு மருத்துவமனையில் நான்கு இடங்களில் ஹெல்ப் டெஸ்க் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது.

கட்டணங்கள் சாதாரண வார்டுக்கு ஆயிரம் ரூபாய், டீலக்ஸ்-க்கு இரண்டாயிரம் ரூபாய், சூப்பர் டீலக்ஸ்க்கு மூன்றாயிரம் ரூபாய் என வசூலிக்கப்படுகிறது.

தமிழகத்தில் முதல்வர், நகராட்சி, மாநகராட்சி எனப் பிரித்து நகர்ப்புற நல வாழ்வு மையங்களை துவங்கி வைத்துள்ளார். 708 மையங்கள் துவங்கி வைக்க முடிவெடுத்து ஓராண்டில் 500 மையங்கள் கட்டப்பட்டுள்ளது.

கோவையில் 65 மையங்கள் திறக்க முடிவு எடுத்து 49 மையங்கள் முதல்வர் திறந்து வைத்துள்ளார். 18 ஆக இருந்த அரசு தலைமை மருத்துவமனை கடந்த இரண்டு ஆண்டில் 25 மருத்துவமனையாக உயர்ந்துள்ளது. செவிலியர் பயிற்சி கல்லூரிகள் ஆறு இருந்த நிலையில் 11 புதிதாக துவங்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் காப்பீடுத் திட்டத்தில் கோவை பெரிய அளவில் பயன்பட்டுக் கொண்டு வருகிறது. காப்பீடு திட்டம் தொடர்பாக புகார்கள் இருந்தால் தகவல் தெரிவியுங்கள், நடவடிக்கை எடுக்கப்படும்.

விபத்துகளின்போது உயிரிழப்புகளைத் தடுப்பதற்கு உலகத்திலேயே முதல் திட்டம் இன்னுயிர் காப்போம் திட்டம். இந்த திட்டத்தை சரியாக தெரிந்து கொள்ளாதவர்கள் குறை சொல்கின்றனர். உலக சுகாதார நிறுவனம் இந்த திட்டத்தைப் பாராட்டியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டில் டெங்கு, மலேரியா போன்ற பாதிப்புகள் மாநகராட்சி, நகராட்சிகளின் நடவடிக்கைகளால் குறைந்துள்ளது. 4,300 காலிப் பணியிடங்களை நிரப்பியுள்ளோம். 1,021 மருத்துவர்களை நிரப்ப நேர்காணல் நடத்த அழைப்பு கொடுத்து 25 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். இதன் பொது தேர்வுக்கான முடிவு 15 நாளில் வெளிவரும். அதன்பின் 1,021 மருத்துவர்களும் 980 மருந்தாளுநர்களும் என ஒரேநாளில் 2,000 பேருக்கு முதல்வர் பணி ஆணை வழங்குவார். காலிப் பணியிடங்கள் நிரப்ப தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேசிய அளவிலான வழிகாட்டுதலின்படி பணி நியமனங்கள் நடைபெறுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com