செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12 வரை காவல் நீட்டிப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றக் காவல் இன்றுடன் முடியும் நிலையில், காணொலிக் காட்சி மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.

பணமோசடி வழக்கில், அமலாக்கத் துறையினா் அமைச்சா் செந்தில்பாலாஜியை கைது செய்த நிலையில், நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட அவரை சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். சென்னை முதன்மை அமா்வு நீதிபதி எஸ்.அல்லி  மருத்துவமனைக்குச் சென்று செந்தில்பாலாஜியை சந்தித்த பின்னா், ஜூன் 28-ஆம் தேதி வரை அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டாா்.

இந்நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் காணொலிக் காட்சி மூலம் செந்தில் பாலாஜி இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அமலாக்கத்துறை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு விதிக்கப்பட்டிருந்த 14 நாள்கள் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிகிறது.

காவேரி மருத்துவமனையில் இருந்து காணொலிக் காட்சி மூலம், சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.

முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி செந்தில் பாலாஜியிம் உடல்நிலையை விசாரித்த பின்னர், ஜூலை 12 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

செந்தில் பாலாஜிக்கு விதிக்கப்பட்ட 14 நாள்கள் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடியும் நிலையில், ஜூலை 12 வரை  நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com