அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

காங்கயம் அருகே மரத்தில் கார் மோதி விபத்து: 3 இளைஞர்கள் காயம்!

காங்கயம் அருகே சாலையோர மரத்தில் கார் மோதி விபத்து: 3 இளைஞர்கள் படுகாயம்

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 7:14 pm

DIN


காங்கயம்: திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே சாலையோர மரத்தில் கார் மோதிய விபத்தில், காரில் பயணம் செய்த 3 இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி நகரைச் சேர்ந்தவர்கள் குமார் (24), லோகேஷ் ராஜ் (22), கௌதம் (22). இவர்கள் மூவரும் தருமபுரியில் நடந்த நண்பரின் திருமணத்திற்குச் சென்று விட்டு, பழனி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர்.

வியாழக்கிழமை மாலை 5 மணி அளவில், சென்னிமலை-காங்கயம் சாலையில், நல்லிக் கவுண்டன் வலசு அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக இவர்கள் வந்த கார் திடீரென நிலைதடுமாறி, சாலையோர புளியமரத்தில் மோதியது.

இந்த சம்பவத்தில் காரில் பயணம் செய்த மூவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு, காங்கயம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு மூவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து காங்கயம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.