மீண்டும் 42 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் உயர்ந்துள்ள நிலையில் மீண்டும் 42 ஆயிரத்தை நெருங்கலாம் என்று கணிக்கப்படுகிறது.


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் உயர்ந்துள்ள நிலையில் மீண்டும் 42 ஆயிரத்தை நெருங்கலாம் என்று கணிக்கப்படுகிறது.
தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களைக் கண்டுவருவது தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த வாரம் சரிவு ஏற்பட்ட நிலையில், இரண்டு நாள்களாக மீண்டும் உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், மார்ச் 1ம் தேதி காலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.28 உயர்ந்து ரூ.5,235 ஆகவும், ஒரு சவரன் ரூ.224 உயர்நது ரூ.41,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேசமயம், வெள்ளியின் விலையும் சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.70.20 ஆகவும், ஒரு கிலோ ரூ.1000 உயர்ந்து ரூ.70,200 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
உலக அளவில் பணவீக்கம், இறக்குமதி வரி, உள்ளிட்ட பல காரணங்கள் தங்கத்தின் விலையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...