அதிமுகவின் தோல்விக்கு இபிஎஸ்தான் காரணம்: டிடிவி தினகரன்

அதிமுகவின் தோல்விக்கு இபிஎஸ்தான் காரணம்: டிடிவி தினகரன்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தோல்விக்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 
Published on

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தோல்விக்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஈவிகேஎஸ்.இளங்கோவன் 1,10,156 வாக்குகள் பெற்றார். 

அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.எஸ்.தென்னரசு  43,923 வாக்குகள் மட்டுமே பெற்றார். 

இந்நிலையில் அதிமுக தோல்வி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்,

'இரட்டை இலை இருந்தும் அதிமுகவுக்கு இவ்வளவு மோசமான தோல்வி கிடைத்துள்ளது. இரட்டை இலை இல்லையென்றால் அதிமுகவின் நிலைமை இன்னும் மோசமாகியிருக்கும். அதிமுகவின் தொடர் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம். அதிமுக, பழனிசாமியின் பிடியில் இருக்கும் வரை கட்சி மேலும் பலவீனம் அடையும், இன்னும் மோசமான நிலைமைக்குத்தான் செல்லும். மத்திய அரசின் ஆதரவு இருந்ததாலும் தொண்டர்களை தன்வசப்படுத்தியும் தலைமைப் பதவியை அடைந்துள்ளார். இது உண்மையான தலைவர் பதவி அல்ல. துரோகத்தின் மூலமே தலைமைப் பதவியை அடைந்திருக்கிறார். காலம் தக்க தண்டனை கொடுக்கும். 

திமுக என்ற தீய சக்தியை வீழ்த்த ஜெயலலிதாவின் தொண்டர்கள் எல்லாரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்' என்றார். 

மேலும் திமுக வெற்றி குறித்து பேசிய டிடிவி தினகரன், 'ஈரோடு கிழக்கில் திமுக பெற்ற வெற்றி வழங்கப்பட்டதல்ல..வாங்கப்பட்டது. விடியல் ஆட்சி என்று கூறி விடியாத ஆட்சியாகத்தான் இருக்கிறது. அனைத்திலும் ஊழல் இருக்கிறது. ஈரோடு கிழக்கில் ஒருவதுற்கு 25,000 முதல் 30,000 ரூபாய் வரை கிடைத்திருக்கும் என்பது அனைவருக்குமே தெரியும். இது தவறான முன்மாதிரி தேர்தல். ஆட்சி. அதிகாரத்தின் மூலமாக வெற்றியை வாங்கிவிட்டார்கள்' என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com