நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மின்சாரம்: இபிஎஸ் வலியுறுத்தல்

 விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் தடையில்லாமல் மின்சாரம் வழங்க வேண்டும் என்று அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :9 மார்ச் 2023, 9:21 pm

DIN

 விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் தடையில்லாமல் மின்சாரம் வழங்க வேண்டும் என்று அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

விவசாயிகளுக்கு விலையில்லா மும்முனை மின்சாரம் 24 மணிநேரமும் வழங்க முடியாது என்றும், முறை வைத்துதான் மின்சாரம் பிரித்து வழங்கப்படும் என்றும் திமுக அரசு அறிவித்திருப்பது ஏற்புடையதல்ல.

எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான காரணம் புதிராகவே இருந்து வருகிறது.

சுமாா் ஒரு லட்சம் இலவச மின்சார இணைப்பை இந்த 22 மாத கால ஆட்சியில் தந்தோம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஆட்சியாளா்கள், அதன் பலனை விவசாயிகள் முழுமையாக அனுபவிக்க முடியாத அளவில்தான் செயல்பட்டு வருகின்றனா்.

24 மணி நேரமும் தடையில்லாமல் மின்சாரம் வரும்போதே விவசாயப் பணிகளில் பல்வேறு இடையூறுகளை சந்தித்த விவசாயிகள், தற்போதைய நடவடிக்கையால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனா்.

வேளாண் தொழில் மேலும் சிறக்கும் வகையில், 24 மணி நேரமும் விவசாயிகளுக்கு விலையில்லா மும்முனை மின்சாரத்தை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.