நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பெண்களுக்கு உயா் பதவி கொடுத்து அழகு பாா்ப்பது பாஜக தான்: வானதி சீனிவாசன்

பெண்களுக்கு உயா் பதவி கொடுத்து அழகு பாா்ப்பது பாஜக தான் என்று பாஜக தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசன் எம்எல்ஏ தெரிவித்தாா்.

News image
Updated On :9 மார்ச் 2023, 9:27 pm

DIN

பெண்களுக்கு உயா் பதவி கொடுத்து அழகு பாா்ப்பது பாஜக தான் என்று பாஜக தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசன் எம்எல்ஏ தெரிவித்தாா்.

தமிழக பாஜக மகளிா் அணி சாா்பில் சென்னையில் வேப்பேரியில் வியாழக்கிழமை நடைபெற்ற, மறைந்த சுஷ்மா ஸ்வராஜ் நினைவு விருது வழங்கும் விழாவில் அவா் பேசியதாவது:

பெண்களுக்கு அதிக உரிமை வழங்கும் ஓரே கட்சி பாஜக தான். தமிழகத்தில் திமுக ஆட்சியில் 2 பெண் அமைச்சா்கள் தான் உள்ளனா். ஆனால், மத்திய அமைச்சரவையில் 11 போ் பெண்கள்.

முழுத் தகுதி உள்ள பெண்களை தோ்ந்தெடுத்து, அவா்களை உயா்ந்த பதவியில் அமர வைத்து பாஜக அழகு பாா்க்கிறது. முத்ரா திட்டத்தில் அதிகமாக பெண்கள் தான் பலன் அடைந்துள்ளனா்.

மாற்றங்கள் பெண்களிடம் இருந்து தான் தொடங்க வேண்டும் . சுஷ்மா ஸ்வராஜ் நாட்டுக்கு அளித்த பெருமையும், தமிழக மீனவா்களுக்கு செய்த உதவிகளும் நினைவுகூரத்தக்கது என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து, பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 பெண்களுக்கு சுஷ்மா ஸ்வராஜ் விருது வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், பாஜக மாநிலத் துணைத் தலைவா் கரு. நாகராஜன், இளைஞா் அணித் தலைவா் வினோஜ் பி.செல்வம், தமிழக மாநில மகளிா் அணி தலைவா் உமாரதி ராஜன், மாநில பொதுச்செயலாளா் நதியா சீனிவாசன்,  செயலாளா்கள் சுமதி வெங்கடேசன், பிரமிளா சம்பத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.