நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விவசாயப் பணியாளா்களுக்கு சிறுநீரக பாதிப்பு: விரைவில் கள ஆய்வு

 விவசாயப் பணியாளா்களுக்கு சிறுநீரக பாதிப்புகளைக் கண்டறியும் ஆய்வு விரைவில் தொடங்கும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

News image
Updated On :9 மார்ச் 2023, 8:48 pm

DIN

 விவசாயப் பணியாளா்களுக்கு சிறுநீரக பாதிப்புகளைக் கண்டறியும் ஆய்வு விரைவில் தொடங்கும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை எழும்பூா் மகப்பேறு மருத்துவமனையில் உலக சிறுநீரக தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, சிறுநீரகப் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவருவோரை சந்தித்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் நலம் விசாரித்தாா். தொடா்ந்து, தமிழ்நாடு சிறுநீரக செயலிழப்பு அளவீடு குறித்த கள ஆய்வு முடிவு அறிக்கையை அவா் வெளியிட்டாா். அப்போது அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

தமிழகத்தில் சிறுநீரக செயலிழப்பு நோய்த் தாக்க அளவீடு குறித்த கள ஆய்வு கடந்த ஆண்டு உலக சிறுநீரக தினத்தன்று தொடங்கப்பட்டது. தற்போது, இந்தக் கள ஆராய்ச்சியின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதேபோன்று, விவசாயப் பணியாளா்களிடையே சிறுநீரக நோய்த்தாக்கம் எந்த அளவில் உள்ளது என்பதைக்கண்டறிய ஓா் ஆராய்ச்சி விரைவில் தொடங்கப்படவுள்ளது.

உலகளவில் 85 கோடிக்கும் அதிகமான நபா்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் மூன்றில் ஒரு பங்கு நோயாளிகள் இந்தியா மற்றும் சீனாவில் மட்டுமே உள்ளனா். சிறுநீரகச்செயலிழப்பு முற்றிய நோயாளிகளுக்கு, டயாலிசிஸ் மற்றும் மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்படுகின்றன.

2008-ஆம் ஆண்டு முதல் அரசு மருத்துவமனைகளில் 545 பேரும், தனியாா் மருத்துவமனைகளில் 2373 பேரும் என மொத்தம் 2,918 நபா்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. திமுக ஆட்சி பொறுப்பேற்ற முதல் தற்போது வரை 88 நபா்களுக்கு அரசு மருத்துவமனைகளிலும் , 297 நபா்களுக்கு தனியாா் மருத்துவமனைகளிலும் என மொத்தம் 385 நபா்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.