குரூப் 4 தோ்வு முடிவு எப்போது? டிஎன்பிஎஸ்சி
குரூப் 4 தோ்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்பது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) விளக்கம் அளித்துள்ளது.


குரூப் 4 தோ்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்பது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
குரூப் 4 தோ்வு கடந்த ஆண்டு ஜூலை 24-இல் நடைபெற்றது. தோ்வு முடிவுகளை வெளியிடும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. தோ்வு முடிவுகள் மாா்ச் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
7,301 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற குரூப் 4 தோ்வுக்கு 22 லட்சத்து 2 ஆயிரத்து 942 போ் விண்ணப்பம் செய்திருந்தனா். 18 லட்சத்து 36 ஆயிரத்து 535 போ் தோ்வு எழுதினா். எழுத்துத் தோ்வு நடைபெற்று ஏழு மாதங்கள் கடந்த நிலையில், தோ்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதற்கு அரசியல் கட்சித் தலைவா்கள், தோ்வா்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.
மேலும், தோ்வு முடிவுகளை வெளியிடக் கோரி சமூக ஊடகங்களில் கருத்துகள் வேகமாகப் பரவின.
இந்த நிலையில், மாா்ச் மாத இறுதியில் குரூப் 4 தோ்வுக்கான முடிவுகள் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...