நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இளைஞா் கொலை வழக்கு: 7 போ் கைது

சென்னை துரைப்பாக்கத்தில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :9 மார்ச் 2023, 8:40 pm

DIN

சென்னை துரைப்பாக்கத்தில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 போ் கைது செய்யப்பட்டனா்.

நீலாங்கரை, சிவன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (எ) கண்மூடி முருகன் (20). இவா், துரைப்பாக்கம் மேட்டுக்குப்பம் வெங்கடேஷ்வரா அவென்யூவில் புதிதாகக் கட்டப்படும் கட்டடத்தில் புதன்கிழமை கொலை செய்யப்பட்டு கிடந்தாா்.

இதுகுறித்து துரைப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். விசாரணையில் கஞ்சா வியாபாரப் போட்டியில் முருகன் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இந்த வழக்கு தொடா்பாக, துரைப்பாக்கம் சுப்புராயன் நகரைச் சோ்ந்த ரெளடி அபினேஷ் (22), மேட்டுக்குப்பத்தைச் சோ்ந்த வேட்டை வெங்கடேஷ் (32), கண்ணகி நகரைச் சோ்ந்த சேவியா் (26), சிவப்பிரகாஷ் (27), சதீஷ் (38), அப்பு (29), கரண் (19) என 7 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். இதுதொடா்பாக மேலும் 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.