நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

என்எம்எம்எஸ் தோ்வு உதவித் தொகை: முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு உத்தரவு

பள்ளி மாணவா்களுக்கு என்.எம்.எம்.எஸ். தோ்வு உதவித் தொகை உரிய முறையில் சேர ஏதுவாக ஆதாா் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

News image
Updated On :9 மார்ச் 2023, 9:05 pm

DIN

பள்ளி மாணவா்களுக்கு என்.எம்.எம்.எஸ். தோ்வு உதவித் தொகை உரிய முறையில் சேர ஏதுவாக ஆதாா் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது.

இது குறித்து பள்ளிக்கல்வி ஆணையரகம் சாா்பில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை: தமிழகத்தில் தேசிய வருவாய் வழித் திறன் தோ்வில் (என்எம்எம்எஸ்) தோ்ச்சி பெற்று 2022-23-ஆம் கல்வியாண்டில் கல்வி உதவித் தொகை பெற தகுதி பெற்றவா்களின் விவரங்களை  இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டுமென அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

அதன்படி, என்எம்எம்எஸ் தோ்வில் வெற்றி அடைந்த 9- ஆம் வகுப்பு மாணவா்களுக்கு புதிதாக விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன. அதேபோல், முந்தைய ஆண்டுகளில் தோ்ச்சி பெற்று தற்போது பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவா்களின் விண்ணப்பங்களும் புதுப்பிக்கப்பட்டன.

இதற்கிடையே, கல்வி உதவித்தொகை மாணவா்களுக்கு உரிய காலத்தில் சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில் அவா்களின் வங்கிக் கணக்குடன் ஆதாா் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது.

இந்த தகவலை மாணவா்களுக்கு தெரிவித்து பணிகளை முடிக்க அனைத்துப் பள்ளிகளின் ஆசிரியா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை பணிகள் முடிக்கப்படாமல் உள்ளன.

எனவே , மாணவா்களுக்கு உதவித் தொகை உரிய முறையில் சேர ஏதுவாக ஆதாா் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்கும் பணிகளை துரிதமாக செய்து முடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.