தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மாவட்ட பாஜக அலுவலகங்களை கட்சியின் தலைவர் ஜெ.பி. நட்டா திறந்துவைத்தார்.
கிருஷ்ணகிரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா இன்று தமிழகம் வந்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் பாஜக மாவட்ட அலுவலகத்தைத் திறந்துவைத்து மற்ற மாவட்ட அலுவலகங்களை காணொலி வாயிலாக திறந்துவைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், 'நாடு முழுவதும் 887 மாவட்ட கட்சி அலுவலகங்கள் கட்ட முடிவு செய்துள்ளோம். 290 அலுவலகங்கள் ஏற்கனவே கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 14 கட்சி அலுவலகங்கள் அர்ப்பணிக்கப்பட்டு, 39 அலுவலகங்கள் கட்டப்பட்டு, 10 அலுவலகங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க | ஆவின் பால் விநியோகத்தில் அடுத்த வாரம் தட்டுப்பாடு?
சமீபத்தில் வடகிழக்கு மாநில தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. திரிபுராவை எங்களால் தக்கவைக்க முடிந்தது. கிறிஸ்தவர்கள் அதிகம் உள்ள நாகாலாந்தையும் வென்றோம். மேகாலயத்திலும் மீண்டும் ஆட்சி அமைத்தோம். அங்குள்ள மக்கள் பாஜகவை ஆதரித்துள்ளனர். வடகிழக்கை நாங்கள் தக்கவைத்துள்ளோம்.
தமிழ்நாட்டிலும் பாஜக விரைவில் ஆட்சியைக் கைப்பற்றும். பாஜகவால் மட்டுமே தமிழ்நாட்டில் நல்லாட்சியை வழங்க முடியும். பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை. பாஜக அலுவலகங்கள் 24 மணி நேரமும் திறந்தே இருக்கும். மாநில கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் குடும்ப அரசியலே உள்ளது. காங்கிரசின் மோசமான ஆட்சி காரணமாகவே மாநில கட்சிகள் தோன்றின' என்று பேசினார்.
இந்நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

டாலருக்கு நிகாரன ரூபாய் மதிப்பு 36 காசுகள் உயர்ந்து ரூ. 91.85ஆக நிறைவு!

பாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!

டேரில் மிட்செல் மீது பந்தை எறிந்த அர்ஷ்தீப் சிங்குக்கு அபராதம்!
கார்மேனி செல்வம் படத்தின் முதல் பாடல் வெளியீடு!
வீடியோக்கள்

#t20wc | டி20 உலகக் கோப்பையின் சிறந்த லெவன்: உங்கள் தேர்வு என்ன? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

