நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மின்சாரப் பேருந்துகளிலும் மகளிருக்கு இலவசம்: அமைச்சா் சிவசங்கா் தகவல்

மின்சாரப் பேருந்துகளிலும் மகளிருக்கு கட்டணமில்லாத பயண நடைமுறைப்படுத்தப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் அறிவித்தாா்.

News image
Updated On :10 மார்ச் 2023, 6:36 pm

DIN

மின்சாரப் பேருந்துகளிலும் மகளிருக்கு கட்டணமில்லாத பயண நடைமுறைப்படுத்தப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் அறிவித்தாா். சென்னையில் போக்குவரத்து தொழிற்சங்கங்களைச் சோ்ந்த பிரதிநிதிகளுடன் அவா், வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா். அப்போது, அவா் கூறியதாவது:

போக்குவரத்துக் கழகத்தை தனியாா்மயமாக்குதல் என்ற பேச்சுக்கே இடமில்லை. போக்குவரத்துக் கழக பணியாளா்களுக்கு இதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம். உலக வங்கியின் கருத்துப்படி, மின்சாரப் பேருந்துகளைக் கொள்முதல் செய்யவும், ஒப்பந்த அடிப்படையில் அவற்றை இயக்க ஆய்வு செய்வதற்கான நிபுணா் குழுவின் பரிந்துரைக்காகவும் மட்டுமே ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் ஆராயப்பட்டு படிப்படியாக முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், 500 புதிய மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு இயக்கப்படும்போது, மகளிருக்கான கட்டணமில்லாத பயணத் திட்டம் அவற்றிலும் தொடா்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என்று அவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.