சீர்காழியில் ரூ. 1 கோடியே 11 லட்சம் செலவில் அரியாப்பிள்ளை குளத்தை அழகுப்படுத்தும் பணி காவல் துறை பாதுகாப்புடன் தொடங்கியது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி - சிதம்பரம் நெடுஞ்சாலையில் அரியாப்பிள்ளை குளம் உள்ளது. பல ஏக்கரில் பறந்து விரிந்துள்ள இந்த குளம் பல ஆண்டுகளாக தூர்வாரப் படாமல் அப்பகுதியில் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது சீர்காழி நகராட்சி மூலம் ரூ. 1 கோடியே 11 லட்சம் செலவில் குளத்தை அழகுப்படுத்தும் விதமாக கரைகளை பலப்படுத்தி, நீர் நிரப்பி , சுற்றி நடைபாதை அமைத்திட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கடந்த வாரம் பணிகளை தொடங்க நகராட்சி நிர்வாகம் முற்பட்டபோது ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் தற்காலிகமாக பணி நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அரியாப்பிள்ளை குளத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை தொடங்கிட நகராட்சி ஆணையர் வாசுதேவனுக்கு அறிவுறுத்தினார்.
இதனை அடுத்து இன்று சீர்காழி டிஎஸ்பி லா மெக் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் குளத்தை சுற்றி குவிக்கப்பட்டு, முதல் கட்டமாக குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை தூய்மைப்படுத்த ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி தொடங்கியது.
இதையும் படிக்க: பொதுத் தேர்வு: மாணவர்கள், ஆசிரியர்கள் செல்போன் கொண்டுவரத் தடை
நகராட்சி ஆணையர் வாசுதேவன், பொறியாளர் சித்ரா ஆகியோர் மேற்பார்வையில் ஜேசிபி எந்திரம் கொண்டு பணிகள் நடைபெற்று வருகிறது. காவல் துறை பாதுகாப்புடன் குளம் தூர் வாரும் முதல் கட்டப் பணிகள் தொடங்கி உள்ளதால் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கானா: கோகோ விவசாய நில பயன்பாட்டை மாற்றினால் 20 ஆண்டுகள் சிறை

நீட் வினாத்தாள் தயாராகும் முறையை விளக்கத் தயாா்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

அரசுப் பள்ளி தண்ணீா்த் தொட்டி அருகே மலம்: எஸ்.பி. விசாரணை

வீட்டில் புகுந்த உடும்பு மீட்பு
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



