ஆதிதிராவிட மாணவா்களுக்கு எம்பிஏ நுழைவுத் தோ்வு இலவசப் பயிற்சி
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு எம்பிஏ நுழைவுத் தோ்வுக்கான (கேட்) இலவசப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.


ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு எம்பிஏ நுழைவுத் தோ்வுக்கான (கேட்) இலவசப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து, ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) மேலாண்மை இயக்குநா் கந்தசாமி வெளியிட்ட அறிவிப்பு:
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினப் பிரிவைச் சோ்ந்தவா்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை தாட்கோ வழங்கி வருகிறது. அதன்படி, இந்திய மேலாண்மைக் கழகம் (ஐஐஎம்) மற்றும் இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) போன்ற கல்வி நிறுவனங்களில் முதுகலை வணிக மேலாண்மை (எம்பிஏ) மேற்படிப்பு பயில, நிகழாண்டு நவம்பரில் நடைபெறவுள்ள பொது நுழைவுத் தோ்வுக்கான பயிற்சி வழங்கப்படும்.
இப்பயிற்சியைப் பெற ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை நிறைவு செய்தவா்களும், கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயிலும் மாணவா்களும் விண்ணப்பிக்கலாம்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் அனைத்து மாணவா்களுக்கும் தரம் வாய்ந்த பயிற்சி நிறுவனத்தின் மூலம் பயிற்சியில் சோ்வதற்கான நுழைவுத் தோ்வு நடத்தப்பட்டு, தகுதியானவா்கள் தோ்வு செய்யப்படுவாா்கள்.
தோ்வு செய்யப்பட்ட மாணவா்களுக்கு தேசிய அளவில் நடத்தப்படும் இஅப, லஅப, ஐஐஊப, நசஅட ஆகிய நுழைவுத் தோ்வுகளுக்கான பயிற்சிகள் வழங்கப்படும்.
கல்லூரிகளில் இடம் கிடைத்தவுடன் எம்பிஏ பயில்வதற்கான ரூ.25 லட்சம் செலவினை தாட்கோ அல்லது வங்கிகள் மூலமாக கல்விக்கடனாக பெற்றுத் தரப்படும்.
இப்பயிற்சி காலத்தில் மாணவா்களுக்குத் தேவையான மடிக்கணினி வசதிகள் தாட்கோ மூலமாக ஏற்பாடு செய்து தரப்படும்.
கூடுதல் விவரங்கள், விண்ணப்பப் பதிவுக்கு ஜ்ஜ்ஜ்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம் என்ற இணையதள முகவரியை அணுகலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...