நமக்கு நாமே: முதல் முறையாக மீனவர்கள் நிதியில் கட்டிய துறைமுகம்

தமிழகத்தில் முதல் முறையாக, நமக்கு நாமே திட்டத்தின் கீழ், அரசின் உதவியுடன் மீனவர்கள் ஒன்றிணைந்து  சொந்த நிதியில் நாகை மாவட்டத்தில் நம்பியார் நகரில் புதிய மீன்பிடித் துறைமுகத்தைக் கட்டியுள்ளனர்.
நமக்கு நாமே: முதல் முறையாக மீனவர்கள் நிதியில் கட்டிய துறைமுகம்
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் முதல் முறையாக, நமக்கு நாமே திட்டத்தின் கீழ், அரசின் உதவியுடன் மீனவர்கள் ஒன்றிணைந்து  சொந்த நிதியில் நாகை மாவட்டத்தில் நம்பியார் நகரில் புதிய மீன்பிடித் துறைமுகத்தைக் கட்டியுள்ளனர்.

நாகை மாவட்டம் நம்பியாா் நகரில் அமைக்கப்பட்ட புதிய மீன்பிடித் துறைமுகத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

நம்பியார் நகரில் வசித்து வரும் சுமார் 1,300 மீனவக் குடும்பங்கள் ஒன்று சேர்ந்து ரூ.11.43 கோடி ரூபாயை திரட்டி கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்த துறைமுகக் கட்டுமானப் பணி ரூ.34.3 கோடி செலவில் நாகை மாவட்டத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

கடலோர மாவட்டங்களின் 'முதன்மை மீனவ பஞ்சாயத்து' அந்தஸ்து தொடர்பாக நம்பியார் நகர் மீன்பிடி ககிராமத்திற்கும், அக்கரைப்பேட்டைக்கு அருகில் உள்ள மக்களுக்கும் இடையே வன்முறை மோதல்கள் வெடித்ததை அடுத்து, முன்னுரிமை அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

நம்பியாா் நகரில் தன்னிறைவு திட்டத்தின் கீழ் ரூ.34 கோடியில் புதிதாக சிறிய மீன்பிடி துறைமுகம் கட்டுமானப் பணிகள், கடந்த 2020 டிசம்பரில் தொடங்கி நடைபெற்று வந்தன. தற்போது பணிகள் நிறைவடைந்ததையடுத்து, மீனவா்களின் பயன்பாட்டிற்காக இத்துறைமுகத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி வாயிலாக திறந்து வைத்தாா். இந்த திட்டத்துக்கு அரசு சார்பில் ரூ.22.87 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

இதையொட்டி, புதிய மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்ற விழால், நாகை கூடுதல் ஆட்சியா் ம. பிரதிவிராஜ், மீன்வளத்துறை அதிகாரிகள், நம்பியாா் நகா் மக்கள் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.

182 மீட்டா் நீளத்தில் கட்டப்பட்டுள்ள இந்த துறைமுகத்தில் நூற்றுக்கணக்கான படகுகள் நிறுத்துவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்துறைமுகம் திறக்கப்பட்டதற்கு, நம்பியாா் நகா் மீனவா்கள் மட்டுமின்றி அப்பகுதி மக்களும் மகிழ்ச்சி தெரிவித்தனா்.

அனைத்து குடும்பங்களும் இந்த திட்டத்திற்கு பங்களிக்க முன்வந்தாலும், பல குடும்பங்களுக்கு அது மிகப்பெரிய சவாலாக மாறியது.“ கரோனா தொற்றுநோய் மற்றும் மடி வலைகள் மீதான தடை எங்களை பெரிதும் தாக்கியது. நாங்கள் கடன்பட்டோம். ஆனால் நாங்கள் எங்கள் திட்டத்தை நிறைவேற்றுவதில் உறுதியாக இருந்தோம்” என்கிறார் மீனவப் பிரதிநிதி இ.எம்.வீரப்பன். 
துறைமுகத்திற்கு கூடுதலாக பல வசதிகள் தேவை. எனவேம் மீனவர்கள் அரசின் உதவியுடன் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதில் நம்பிக்கையுடன் உள்ளோம் என்றும் கூறுகிறார்கள் ஒருமித்த குரலில்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com