

கோவையில் வட மாநில தொழிலாளர்களை மர்ம நபர்கள் தாக்கியதாக 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ள சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாகவே வட மாநில தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு திரும்புவதாகவும் அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு காவல்துறை மற்றும் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த நிலையில், கோவை டவுன்ஹால் பகுதி இடையர் வீதியில் வட மாநில தொழிலாளர்களை மர்ம நபர்கள் தாக்கியதாக அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்டோர் கூடினர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து இடையர் வீதியைச் சேர்ந்த சூரியபிரகாஷ், பிரகாஷ், பிரகதீஸ்வரன், வேல்முருகன். ஆகியோர் வடமாநிலத்தவர் மீது தாக்குதல் நடத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் தனிந்திருந்த நிலையில் தற்போது இந்த சம்வத்தால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.