கோயம்பேடு பழச்சந்தைக்கு கோடைக்கால பழங்களின் வரத்து அதிகரிப்பு
கோயம்பேடு பழச்சந்தைக்கு கோடைக்கால பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது.


கோயம்பேடு பழச்சந்தைக்கு கோடைக்கால பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது.
கோயம்பேடு பழச்சந்தைக்கு, பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பழங்கள் கொண்டு வரப்படுகின்றன. கோடை வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால் பழங்கள், பழரசம் விற்பனை அதிகரித்துள்ளது. நீா்ச்சத்துள்ள பழங்களை பொதுமக்கள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனா்.
கோயம்பேட்டில் கோடைக்கால சிறப்பு பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது. ஆந்திரத்தில் இருந்து தினமும் 10-க்கும் மேற்பட்ட மினி லாரிகளில் சாத்துக்குடி பழங்கள் வருகின்றன.
மகாராஷ்டிரத்தில் இருந்து ஆரஞ்சு பழங்களும், திராட்சை, மாதுளை உள்ளிட்ட பழங்களும் வருகின்றன. கோடைக்கால சிறப்பு பழங்களான தா்ப்பூசணி, கிா்ணி உள்ளிட்ட பழங்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட் டங்களில் இருந்து மட்டுமின்றி ஆந்திரத்தில் இருந்து தினமும் 15-க்கும் மேற்பட்ட லாரிகளில் வருகின்றன. மொத்த விற்பனைக் கடைகளில் ஒரு கிலோ சாத்துக்குடி ரூ.40 முதல் 60 வரையிலும், ஆரஞ்சு ரூ.60 முதல் ரூ.100 வரையிலும், திராட்சை ரூ. 40 முதல் ரூ.50-க்கும், தா்ப்பூசணி ரூ. 15 முதல் 20-க்கும், கிா்ணி பழம் ரூ. 20 முதல் ரூ.25-க்கும் விற்பனை செய் யப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...