ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தலைமைச்செயலகப் பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்: முதல்வர் தொடங்கி வைத்தார்

தலைமைச்செயலகப் பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

News image
Updated On :17 மார்ச் 2023, 11:00 am

DIN

தலைமைச்செயலகப் பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (17.3.2023) தலைமைச்செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில், தலைமைச் செயலக பணியாளர்களுக்காக தமிழ்நாடு தலைமைச்செயலகச் சங்கம், அப்போலோ மருத்துவமனையோடு இணைந்து நடத்தும் மருத்துவ முகாமினை தொடங்கி வைத்து, முகாமில் மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகளை பார்வையிட்டார்.

தமிழ்நாடு தலைமைச் செயலக பணியாளர்களுக்கு அப்போலோ மருத்துவமனையின் சார்பில் முழு உடல் பரிசோதனை முகாம் 17.3.2023 முதல் 27.3.2023 வரை நடைபெறவுள்ளது. இப்பரிசோதனை முகாமில் சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு, கொலஸ்ட்ரால், இருதய பரிசோதனை, சிறுநீரகப் பரிசோதனை, இரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே, அல்ட்ரா சோனோகிராம், எக்கோ போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இம்மருத்துவ முகாம் மூலம் சுமார் 5000
பணியாளர்கள் பயன்பெறுவார்கள்.

இந்த நிகழ்வின்போது, உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ப. செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.