அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகின்றது. தென் இந்திய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திப்பது தொடர்வதால், தமிழகத்தில் திடீர் மழை பெய்து வருகிறது.
கடந்த ஒரு வாரக் காலமாக தமிழகம் முழுவதும் வெயில் தகித்துவந்த நிலையில் இரண்டு நாள்களாக பெய்துவரும் மழை சற்று ஆறுதலை அளித்துள்ளது.
இந்நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, விழுப்புரம், தஞ்சையில் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...