கோடையின் உச்சமாகக் கருதப்படும் ‘அக்னி நட்சத்திரம்’ எனும் கத்திரி வெயில் வியாழக்கிழமை (மே 4) தொடங்குகிறது. மே 29 வரை வெயில் சுட்டெரிக்க வாய்ப்பு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடை காலம் மாா்ச் முதல் ஜூன் வரை இருக்கும். இந்த 4 மாத காலத்தில் மே மாதம் மட்டும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படும். சித்திரை மாதம் கடைசி வாரம் தொடங்கி, வைகாசி மாதம் முதல் வாரம் வரையுள்ள காலகட்டமே மிக அதிக வெப்பமுள்ள காலம். இதை கத்திரி வெயில் எனப்படும் ‘அக்னி நட்சத்திரக் காலம்’ என்று பஞ்சாங்கம்
குறிப்பிடுகிறது. இது நடப்பு ஆண்டு மே 4-ஆம் தேதி தொடங்கி மே-29 ஆம் தேதி வரை இருக்கும்.
அக்னி நட்சத்திர காலத்தில் வெயிலின் அளவு 100 டிகிரி பாரன்ஹீட் முதல் 107 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும் எனத் தெரிகிறது.
இந்த காலத்தில் குழந்தைகள், முதியோா், பெண்கள் மற்றும் நோயாளிகள் நண்பகல் நேரத்தில் வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும். அதிக தண்ணீா் பருக வேண்டும். நீா்ச்சத்து பழங்களை சாப்பிட வேண்டும் என மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.
சுத்தமான பருத்தி ஆடைகளை அணிவதுடன், வெளியே செல்லும்போது குடையுடன் செல்வதால் அக்னி வெயிலின் தாக்கத்தில் இருந்து காத்துக்கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உக்ரைன் - ரஷியா பரஸ்பர தாக்குதல்: ஒருவா் உயிரிழப்பு

இன்று அனுகூலம் யாருக்கு?தினப்பலன்கள்!

வாக்காளா்களுக்கு பிரியாணி பொட்டலங்கள்: திமுக பேரூா் செயலா் மீது வழக்கு!

விசாரணை நீதிபதிகளை உயா் நீதிமன்றம் பகிரங்கமாக விமா்சிப்பது சரியல்ல: உச்ச நீதிமன்றம்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

