இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

லத்தேரியில் எருது விடும் திருவிழா

வேலூர் மாவட்டம் காட்பாடி  அடுத்த லத்தேரி பகுதியில்  எருது விடும் திருவிழா வெகு விமர்சையாக  நடைபெற்றது.

News image
Updated On :3 மே 2023, 5:54 pm IST

வேலூர் மாவட்டம் காட்பாடி  அடுத்த லத்தேரி பகுதியில்  எருது விடும் திருவிழா வெகு விமர்சையாக  நடைபெற்றது.

வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி சித்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.  ஆந்திரம், தமிழகத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான  மக்கள் எருது விடும் திருவிழாவை காண குவிந்திருந்தனர்.

குறிப்பிட்ட இலக்கினை  குறைந்த நேரத்தில் கடக்கும் காளைகளுக்கு முதல் பரிசாக ரூ.2,00,000, இரண்டாம் பரிசாக ரூ.1,75,000, மூன்றாம் பரிசாக ரூ.1,50,000, நான்காம் பரிசாக ரூ.1,25,000 என 70 பரிசுகள் வழங்கப்பட்டன.

காலை விடும் திருவிழாவில் காளைகள் முட்டியதில்  5 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. எருது விடும் திருவிழாவில் அசம்பாவிகள் ஏதும் நடைபெறாமல் இருக்க லத்தேரி காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.